Melodrama – அரங்க நாடகம்

பாற்கடல் – அரங்க நாடகம் அழைப்பிதழ் வெளியீடு

Paarkadal (Divine Revolution Through Wisdom of Milk Ocean) – Melodrama 

WhatsApp Image 2019-12-04 at 5.12.30 PM

WhatsApp Image 2019-12-04 at 5.12.29 PM

பாற்கடலைக் கடைவது என்பது புராணங்களில் மிக ஆழமான உண்மைகளை வெளிக்கொணரும் உட்கருத்தைத் தாங்கியுள்ளது. பேரலைகளால் கொந்தளித்துக் கிடந்த பெருங்கடலின் மையமாக நிமிர்ந்த மேருவை வாசுகி எனும் பாம்பைக் கொண்டு வலிமையாக இறுக்கினார்கள். மேரு மலையை வாசுகி இடதும் வலதும் தன்னை அசைத்துச் சுற்ற வையமே அதிர்ந்தது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய பெருவட்டச் சக்கரத்தின் மையத்திலிருந்து அற்புதமான உண்மைகள் பொத்துக் கொண்டு கிளர்ந்தெழுந்தன. உண்மைகள் நிலையானது. தற்போதய மாய உலகின் திரையை உண்மை எனும் ஆயுதம் தகர்த்தெரியும் என்ற நோக்குடன் சுய மெய்யறிவகம் படைக்கவிருக்கும் அரங்க நாடக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நஞ்சுண்ட உலக நாதர் சிவ பெருமானுக்கு இம்மாபெரும் முயற்சி இனிதெ அமைய சிறப்பு பூசை செய்யப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம்,120 மாணவர்கள் பங்கு பெரும் இம்மாமேடை நாடகம் இறைவனின் நல்லாசியுடன் நடைபெற ஆயத்தம் கண்டுள்ளது. இந்நாடக அழைப்பிதழும் இவ்வழிபாட்டுச் சிறப்பு நாளிலேயே வெளிகண்டு விட்டது.

#psm_paarkadal19  #psm_melodrama19